குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக போராடுவதற்கு மாணவர்கள் தூண்டப்படுகின்றனர் என பிரதமர் மோடி பரபரப்பு குற்றம் சாட்டியுள்ளார். டெல்லியில், சட்டமன்ற தேர்தல் பிரச்சார கூட்டத்தில் பேசிய அவர், ஜாமியா மிலியா பல்கலைக் கழக மாணவர்களின் போராட்டத்தின் பின்னணியில் அரசியல் சதி இருப்பதாகவும் கூறினார். ஷாகீன் பாக்கில் நடைபெற்று வரும் தொடர் போராட்டதை, காங்கிரஸ், ஆம் ஆத்மி ஆகிய கட்சிகள் தூண்டி வருகின்றன என்றும், நாட்டின் அமைதிக்கு எதிராக சதி நடக்கிறது என்றும் குற்றம் சாட்டினார். ஷாகின் பாக் போராட்டத்தால், டெல்லி மக்கள் போக்குவரத்து நெருக்கடி உள்ளிட்ட பல சிரமங்களை சந்திக்கின்றனர் என்றும் மோடி குறிப்பிட்டார்.