டெல்லியில் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், பிளாஸ்மா சிகிச்சை முறை நல்ல பலன் அளித்துள்ளதாக அம்மாநில முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், சோதனை முறையாக மேற்கொள்ளப்பட்ட பிளாஸ்மா சிகிச்சை முறையால், அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட கொரோனா தொற்று நோயாளிகள், குணமடைந்து வருவதாகத் தெரிவித்தார்.