வருமான வரித்துறை விவகாரத்தில் நடிகர் ரஜினிக்கு ஒரு நீதி, நடிகர் விஜய்க்கு ஒரு நீதியா? என நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன் கேள்வி எழுப்பினார். இதுதொடர்பாக மக்களவையில் பேசிய அவர், படப்பிடிப்பு தளத்தில் இருந்து நடிகர் விஜய் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்டதாகவும் கூறியுள்ளார். எல்ஐசி, பிஎஸ்என்எல், ஏர் இந்தியா போன்ற இந்திய அரசின் சொத்துக்களை தொடர்ந்து மத்திய அரசு விற்பனை செய்து வருவதாகவும் தயாநிதி மாறன் குற்றம்சாட்டினார். ஆதார் அட்டைக்காக ஏற்கனவே 12 ஆயிரத்து 500 கோடி ரூபாய் செலவிடப்பட்டு நாட்டு மக்களின் தகவல் திரட்டப்பட்டு இருக்கும் சூழ்நிலையில் என்பிஆர் எனப்படும் தேசிய மக்கள் தொகை பதிவேடுக்காக மேலும் 4500 கோடி ரூபாய் மத்திய அரசு செலவிட முடிவு எடுத்திருப்பதும் பொதுமக்களின் வரிப்பணத்தை இதுபோன்று தேவையற்ற செலவு செய்வதை ஏற்க முடியாது என்றும் தயாநிதி மாறன் தெரிவித்தார்.