பாஜக ஆளும் மாநிலமான உத்தரபிரதேசத்தில் தலித் சமூகத்தை சேர்ந்த இருவருக்கு செருப்பு மாலை அணிவித்து கொடுமைப்படுத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக, இளைஞர் காங்கிரஸை சேர்ந்த ஸ்ரீவர்சா கூறியுள்ளார். இந்த காட்சியை தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர் இது தான் புதிய இந்தியாவில் உத்தரபிரதேச தலித் மக்கள் வாழ்க்கை பிரதிபலிப்பா என கூறியுள்ளார்.
"ஒரு மனிதன் எந்த காரணத்திற்காக இன்னொரு மனிதனை இப்படி நடத்துகிறான்" - தனது மனதை மிக ஆழமாக பாதித்துள்ளது - நடிகர் பிரசன்னா
ஒரு மனிதன் எந்த காரணத்திற்காக இன்னொரு மனிதனை இப்படி நடத்துகிறான் என நடிகர் பிரசன்னா கேள்வி எழுப்பியுள்ளார். பூமியில் இத்தகைய கொடுமை கொடூரமானது என தமது டுவிட்டர் பக்கத்தில் கூறியுள்ளார். உத்தரபிரதேசத்தில் நடந்த சம்பவம், தமது மனதை மிக ஆழமாக பாதித்துள்ளதாக கூறியுள்ளார்.