அரசியல்

மக்கள் எதிர்க்கும் திட்டங்களை வளர்ச்சி என்பதா? - மாநிலங்களவையில் டி.ராஜா கேள்வி

மக்கள் எதிர்க்கும் திட்டங்களுக்கு ஏன் தடைவிதிக்க கூடாது என, மாநிலங்களவையில் டி.ராஜா கேள்வி எழுப்பினார்.

தந்தி டிவி
மக்கள் எதிர்க்கும் திட்டங்களுக்கு ஏன் தடைவிதிக்க கூடாது என, மாநிலங்களவையில் டி.ராஜா கேள்வி எழுப்பினார். மாநிலங்களவையில் இன்று பேசிய அவர், தூத்துக்குடியில் வளர்ச்சி என்கிற பெயரில் ஸ்டெர்லைட் ஆலைக்கு அனுமதி அளிக்கப்பட்ட நிலையில், நிலத்தடி நீர் மாசு ஏற்படுவதாக புகார் தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டு மக்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தப்பட்டதை, சுட்டிக் காட்டினார். மேலும், தற்போது ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது என்றும், இதனால் நிலத்தடி நீர் பாதிக்கப்படும் என்று பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், இது போன்ற திட்டங்களுக்கு, மத்திய அரசு ஏன் தடை விதிக்கக் கூடாது? என்றும், இது போன்ற திட்டங்களை எப்படி அனுமதித்தீர்கள் என்றும் டி ராஜா கேள்வி எழுப்பினார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்