அரசியல்

"அ.தி.மு.க.வுக்கு முக்கியமான தேர்தல்" - அமைச்சர் சி.வி.சண்முகம் பேச்சு

இந்த தேர்தல் அ.தி.மு.க.வுக்கு, வாழ்வா சாவா என்ற சூழலில் நடக்கும் முக்கியமான தேர்தல் என சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி

இந்த தேர்தல் அ.தி.மு.க.வுக்கு, வாழ்வா சாவா என்ற சூழலில் நடக்கும் முக்கியமான தேர்தல் என சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் தெரிவித்துள்ளார். கள்ளக்குறிச்சி நாடாளுமன்ற தொகுதி தே.மு.தி.க. வேட்பாளர் எல்.கே.சுதீஷ் அறிமுக கூட்டம் தியாகதுருகத்தில் நடைபெற்றது. அதில் பேசிய அமைச்சர் சி.வி.சண்முகம், இந்த தேர்தல் முடிவுகள் தமிழகத்தின் அரசியல் களத்தை திருப்பி போடும் என்றார். ரிஷிவந்தியம், சங்கராபுரம், கள்ளக்குறிச்சி ஆகிய தொகுதிகளில் ஒரு இடங்களில் கூட முரசு சின்னம் வரையவில்லை என்று சுட்டிக்காட்டிய அமைச்சர் சி.வி.சண்முகம், அ.தி.மு.க.வினர் தங்களின் வீடுகளில் முரசு சின்னம் வரைய வேண்டும் என கேட்டுக்கொண்டார். கருத்து வேறுபாடுகளை மறந்து அ.தி.மு.க. கூட்டணியினர் பணியாற்ற வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டார்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்