அரசியல்

நாராயணசாமி மீது ஊழல் குற்றச்சாட்டு:"விசாரணை மேற்கொண்டால் ஒத்துழைக்க வேண்டும்"- துணை நிலை ஆளுநர் கிரண்பேடி

புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி மீது விசாரணை மேற்கொண்டால் ஒத்துழைக்க வேண்டும் என்று அம்மாநிலத்தின் துணை நிலை ஆளுநர் கிரண்பேடி தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி
புதுச்சேரி மாநிலத்தில், முதலமைச்சர் நாராயணசாமி மீது காங்கிரஸ் அதிருப்தி எம்.எல்.ஏ. தனவேலு ஊழல் குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார். இது தொடர்பாக பேசிய நாராயணசாமி, குற்றச்சாட்டுகளை நிரூபித்தால் பதவியில் இருந்து விலக தயார் என கூறியிருந்தார். இந்த நிலையில், வாட்ஸ் அப் மூலம் நாராயணசாமிக்கு சவால் விடுத்துள்ள துணை நிலை ஆளுநர் கிரண்பேடி, முதலமைச்சர் விசாரணையை எதிர்கொள்ள வேண்டும் என்றும் சவால் விடுத்துள்ளார். சட்டமன்ற உறுப்பினர் சொன்னவற்றின் அடிப்படையில், விசாரணையை தொடங்கினால் விசாரணையை எளிதாக்க முதல்வர் உதவ வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்