அரசியல்

கொரோனா அறிகுறிகள் முற்றிலுமாக இல்லை - சசிகலாவின் மருத்துவ அறிக்கையில் தகவல்

சசிகலாவுக்கு கொரோனா அறிகுறிகள் முற்றிலுமாக இல்லை என மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

தந்தி டிவி

சசிகலாவுக்கு கொரோனா அறிகுறிகள் முற்றிலுமாக இல்லை என மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.கொரோனா தொற்று காரணமாக பாதிக்கப்பட்டுள்ள சசிகலா விக்டோரியா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில், அவரது உடல் நிலையில், நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகவும், கொரோனா அறிகுறிகள் முற்றிலுமாக இல்லை எனவும் விக்டோரியா மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. இருப்பினும் தொடர்ந்து கொரோனா சிகிச்சை அளிக்கப்பட்டு வருதாக கூறப்பட்டுள்ளது. மேலும், காலை 8 மணி நிலவரப்படி 3 லிட்டர் ஆக்ஸிஜன் உதவியுடன் சுவாசித்து வந்த சசிகலா, தற்போது 2 லிட்டர் ஆக்ஸிஜன் உதவியுடன் சுவாசித்து வருவதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்