அரசியல்

தமிழகத்துக்கு தலைவலி கொடுக்கவே அந்த ஒரு மத்திய அமைச்சர் நியமனமா? - மாற்ற வலுக்கும் குரல்

தந்தி டிவி

ராகுல் காந்தியை மக்களவை தலைவராக அறிவிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட 7 தீர்மானங்கள், தமிழ்நாடு காங்கிரஸ் பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்டன. தமிழ்நாடு காங்கிரஸ் பொதுக்குழு கூட்டம், காமராஜர் அரங்கத்தில், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை தலைமையில் நடைபெற்றது. இதில், தமிழ்நாட்டின் உரிமைகளை தொடர்ந்து பறிக்கும் கர்நாடகத்தை சேர்ந்த வி. சோமன்னாவை, ஜல்சக்தி பொறுப்பிலிருந்து உடனடியாக விடுவிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. மேலும், முல்லைப்பெரியாறு அணைப் பகுதியில் புதிய அணை கட்டவும், பழைய அணையை இடிக்கவும் ஒன்றிய அரசிடம் கேரள அரசு அனுமதி கோரியிருப்பதாக வரும் செய்தி அதிர்ச்சியளிப்பதாகவும், இதனை தடுக்க தமிழக அரசு நீதிமன்றம் மூலம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளது.

BREAKING || பரபரப்பான சூழலில் முதல்வர் சரமாரி அட்டாக்

Breaking | TVK Vijay | CBI | கேள்விகளை கேட்காத சிபிஐ? | வெளியான முக்கிய அப்டேட்

Breaking | Kovai | Police | பெண் போலீசிடம் அசிங்கம் | "10 பிரிவுகளில்.." | அதிரடி ஆக்‌ஷன்

BREAKING || இன்று வெளியாகும் தேர்தல் தேதி... சூட்டோடு சூடாக அதிரடியை தொடங்கிய திமுக

Breaking | TN Election | தமிழ்நாடே உற்றுநோக்கும் முக்கிய அறிவிப்பு | அனல் பறக்க போகும் தேர்தல் களம்