ராஜஸ்தான் மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியினர் வித்தியாசமான பிரசாரத்தை தொடங்கியுள்ளனர். பா.ஜ.க. மோடி அரசு மேற்கொண்ட ரஃபேல் ஒப்பந்தம் தொடர்பான 4 கேள்விகளை பட்டங்களில் அச்சிட்ட அவர்கள், அவற்றை பொதுமக்களுக்கு வழங்கி வருகின்றனர். மகர சங்கராந்தியை ஒட்டி, ஜெய்பூரில் பல வகையான பட்டங்கள் விற்பனை செய்யப்படும் நிலையில், அவற்றில் ரஃபேல் பிரசார பட்டங்களும் இடம்பெற்றுள்ளன.