அரசியல்

காங். தலைவராக சோனியாகாந்தி நீடிப்பார் - கட்சி தீர்மானம்

காங்கிரஸ் கட்சியின் தலைவராக சோனியாகாந்தி நீடிப்பார் என அக்கட்சியின் காரிய கமிட்டி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு உள்ளது.

தந்தி டிவி

காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவி குறித்து, சர்ச்சை எழுந்த நிலையில், காணொலி காட்சி மூலம் காரிய கமிட்டி கூட்டம் 7 மணி நேரம் நடைபெற்றது.

* அதில், புதிய தலைவரை தேர்ந்தெடுக்கும் வரை இடைக்கால தலைவராக உள்ள சோனியாகாந்தி, அதே பதவியில் மேலும் 6 மாதங்களுக்கு நீடிப்பார் என தகவல் வெளியாகி உள்ளது.

* கட்சி மற்றும் தலைமையை பலவீனமாக்க யாருக்கும் உரிமையில்லை என தெரிவித்த கூட்டத்தில், சோனியா காந்திக்கு உதவ குழு அமைக்க முடிவு செய்துள்ளனர்.

* கட்சியில் அமைப்புரீதி மாற்றம் செய்ய சோனியா காந்திக்கு அதிகாரம் அளிக்க முடிவு செய்த கூட்டத்தில், சோனியா மற்றும் ராகுலின் கேள்விகள் எதிர்க்கட்சியை நிலைகுலைய வைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

* கட்சியின் உள்விவகாரங்களை வெளியில் பேசக்கூடாது என தெரிவித்த கூட்டத்தில், மோடிக்கு பெரும் சவாலை ராகுல் தந்துள்ளதாகவும் கூறினர்.

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி