அரசியல்

Congress | Rahul Gandhi| காங்கிரஸுக்கு அடியோடு சரிந்தது.. ஒரு தசாப்தமே காணாத பெரும் வீழ்ச்சி

Congress | Rahul Gandhi| காங்கிரஸுக்கு அடியோடு சரிந்தது.. ஒரு தசாப்தமே காணாத பெரும் வீழ்ச்சி

thanthitv

2025-26 நிதி ஆண்டில் காங்கிரஸ் கட்சிக்கான நன்கொடை 75 சதவீதம் சரிந்திருப்பது குறித்து விரிவாக பார்க்கலாம். இந்தியாவில் அரசியல் கட்சிகளுக்கு தனிநபர்கள், நிறுவனங்கள், தேர்தல் அறக்கட்டளைகளிடம் இருந்து நன்கொடை கிடைக்கிறது. இதில் ஒரு நிதியாண்டில் 20 ஆயிரம் ரூபாய்க்கு மேல் கிடைக்கும் நன்கொடை விவரங்களை அரசியல் கட்சிகள் தேர்தல் ஆணையத்திடம் சமர்ப்பிக்க வேண்டும். அப்படி 2025-26 நிதியாண்டில் பெற்ற நன்கொடை விபரங்களை காங்கிரஸ் கட்சி தேர்தல் ஆணையத்தில் சமர்பித்துள்ளது. அதில் 130.69 கோடி ரூபாய் நன்கொடையாக கிடைத்ததாக காங்கிரஸ் கட்சி தெரிவித்திருக்கிறது. அதை முந்தைய ஆண்டோடு ஒப்பீடுகையில் காங்கிரஸ் கட்சிக்கு நன்கொடை 75% அளவுக்கு சரிந்திருக்கிறது. நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற்ற 2024-25 நிதியாண்டில் காங்கிரஸ் கட்சிக்கு 517.39 கோடி ரூபாய் நன்கொடையாக கிடைத்திருந்தது. ஒரே ஆண்டில் 386.70 கோடி ரூபாய் காங்கிரசுக்கு நன்கொடை குறைந்துள்ளது. Prudent Electoral அறக்கட்டளை காங்கிரசுக்கு வழங்கிய நன்கொடை குறைந்தது அக்கட்சியோட நன்கொடை குறைய முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது. GFX 2 in 2024–25 நிதியாண்டில் அந்த அறக்கட்டளை காங்கிரசுக்கு 216.34 கோடி ரூபாயை வழங்கியிருந்தது. ஆனால் 2025–26 நிதியாண்டில் வெறும் 25 கோடி ரூபாய் மட்டுமே வழங்கியிருக்கிறது. அதாவது Prudent Electoral அறக்கட்டளையிடம் இருந்து காங்கிரசுக்கு நன்கொடை கிடைப்பது சுமார் 88 சதவீதம் குறைந்திருக்கிறது. காங்கிரஸ் கட்சியோட நன்கொடையை பார்க்கையில் 10 ஆண்டுகளுக்கு பிறகு பெரிய சரிவை சந்தித்துள்ளது. இதற்கு முன்னதாக 2014–15 நிதியாண்டில் காங்கிரசுக்கு 141.46 கோடி ரூபாய் நன்கொடையாக கிடைத்தது. அதுவே 2015-16-ல் 19.80 கோடி ரூபாயாக சரிந்திருந்தது. அதாவது 85.96% சரிந்திருந்தது. இப்போது மீண்டும் நன்கொடையில் சரிவை சந்தித்திருக்கிறது. கடந்த 2024-25 நிதியாண்டில் பாஜக 6 ஆயிரத்து 74 கோடி ரூபாய்க்கு மேல் நன்கொடைகளை பெற்றது. அதாவது காங்கிரசுக்கு கிடைத்ததைவிட 12 மடங்கு அதிகம். இப்போது 2025-26 நிதியாண்டுக்கான பாஜகவின் நன்கொடை அறிக்கை இன்னும் தேர்தல் ஆணையத்தால் வெளியிடப்படாததால், அந்த புள்ளிவிபரங்கள் தெரியவரவில்லை

Chennai | crackers | மோசமான நிலையில் சென்னை.. தீபாவளி முடிந்ததும் வந்த ஷாக்

Chennai Airport | Diwali | பட்டாசு புகையால் ஏர்போர்ட் ஸ்தம்பிப்பு! வானில் வட்டமடித்த விமானங்கள்

Cuddalore | பீர் பாட்டிலால் நண்பர் கொலை... துப்பாக்கியால் விரட்டி சுட்டு பிடித்த போலீசார்..

Chennai | Diwali | சென்னையில் கோலாகலமாக கொண்டாடப்பட்ட தீபாவளி.. திடீரென வந்த ஷாக் ரிப்போர்ட்

Cuddalore மோதலில் ஈடுபட்ட இளைஞர்களை விலக்கிவிட சென்றபோது போலீஸ் மீதே தாக்குதல்