அரசியல்

தங்கச்சி போட்ட ஸ்கெட்ச்.. ஜெகனுக்கு அடுத்த ஷாக்.. இனி பாசம் வேலை செய்யுமா?

தந்தி டிவி

ஆந்திர மாநில காங்கிரஸ் தலைவர் பதவியிலிருந்து கிடுகு ருத்ர ராஜு விலகியுள்ள நிலையில், ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியின் தங்கையான ஒய்.எஸ்.சர்மிளா அப்பதவியில் நியமிக்கப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது. ஆந்திர மாநில காங்கிரஸ் தலைவராக இருந்து வந்த கிடுகு ருத்ர ராஜு, திடீரென தனது பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார். இந்நிலையில் ஒய்.எஸ். ஷர்மிளா, ஆந்திர மாநில காங்கிரஸ் தலைவராக நியமிக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஒய்.எஸ். ஷர்மிளா, ஆந்திர மாநில முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டியின் சகோதரி ஆவார். ஒய்எஸ்ஆர். தெலங்கானா என்ற கட்சியை தொடங்கி நடத்தி வந்த அவர், அண்மையில் காங்கிரஸில் இணைந்ததோடு, தனது கட்சியையும் காங்கிரஸில் இணைத்தார். ஜெகன்மோகன் ரெட்டிக்கும், ஷர்மிளாவுக்கும் கருத்து வேறுபாடு நிலவி வருவதாக, நீண்டகாலமாக தகவல்கள் உலா வருவது குறிப்பிடத்தக்கது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்