அரசியல்

மத்திய அரசை கண்டித்து காங்கிரஸ் போராட்டம் : "தேசத்தை பாதுகாப்போம்" என்ற பெயரில் ஆர்ப்பாட்டம்

மத்திய பாஜக அரசை கண்டித்து டெல்லியில் காங்கிரஸ் சார்பில்,மாபெரும் பேரணி நடைபெற்றது. இதில் லட்சக்கணக்கான காங்கிரஸ் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

தந்தி டிவி

குடியுரிமை சட்டதிருத்த மசோதா காஷ்மீர் பிரச்சினை, விவசாயிகள் பிரச்சினை பாலியல் குற்றங்களை கண்டித்து "தேசத்தை பாதுகாப்போம் " என்ற பெயரில் காங்கிரஸ் சார்பில் டெல்லியில் பிரமாண்டமான கண்டன பேரணி நடைபெற்றது. டெல்லி ராம்லீலா மைதானத்தில் தொடங்கிய இந்த பேரணியில், சோனியாகாந்தி, ராகுல் காந்தி, முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங், பிரியங்கா காந்தி, ப.சிதம்பரம் உள்பட காங்கிரஸ் மூத்த தலைவர்கள் பேரணியில் கலந்து கொண்டனர். இந்த பேரணியில், காங்கிரஸ் ஆளும் மாநில முதலமைச்சர்கள் மற்றும் லட்சக்கணக்கான காங்கிரஸ் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்