Karnataka | Congress | MLA | மீண்டும் பூகம்பத்தை கிளப்பிய காங்., எம்.எல்.ஏ #karnataka #congress #mla #thanthitv கர்நாடக மாநிலத்தின் முதலமைச்சராக டி.கே. சிவக்குமார் விரைவில் பொறுப்பேற்பார் என ராமநகரா தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ இக்பால் ஹுசைன் தெரிவித்துள்ள கருத்து, அம்மாநில அரசியலில் மீண்டும் புயலைக் கிளப்பியுள்ளது. ராமநகராவில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் , டி.கே. சிவக்குமார் முதலமைச்சர் நாற்காலியில் அமர இருப்பதாக தேதி குறிப்பிட்டு வெளிப்படையாக பேசியுள்ளார். ஏற்கனவே கர்நாடகாவில் முதலமைச்சர் சித்தராமையா மற்றும் டி.கே. சிவக்குமார் இடையே அதிகாரப் பகிர்வு குறித்து நீண்ட நாட்களாக விவாதங்கள் நடைபெற்று வரும் நிலையில், தற்போது ஆளுங்கட்சி எம்எல்ஏ இவ்வாறு பேசியிருப்பது கர்நாடகா மாநில அரசில் தலைமை மாற்றம் ஏற்படுமா? என்ற விவாதத்தை மீண்டும் கிளப்பியுள்ளது.