தேசிய குடிமக்கள் பதிவேடு தொடர்பாக, காங்கிரஸ் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தி தலைமமையில் வரும் 25ம் தேதி டெல்லியில் உள்ள அக்கட்சி அலுவலகத்தில் கூட்டம் நடக்கிறது. இதில் அக்கட்சியின் முக்கிய நிர்வாகிகள் கலந்து கொள்வார்கள் என கூறப்படுகிறது. அசாமில் கடந்த ஆகஸ்ட் மாதம் வெளியிடப்பட்ட தேசிய குடிமக்கள் பதிவேட்டில் சுமார் 19 லட்சம் பேர் நீக்கப்பட்டிருந்தனர். இதுபோன்ற பதிவேடு நாடு முழுவதும் தயாரிக்கப்படும் என, உள்துறை அமைச்சகம் ஏறக்னவே அறிவித்திருந்தது. இந்நிலையில், இதுதொடர்பாக ஆலோசனை நடத்த சோனியா காந்தி தலைமையில், காங்கிரஸ் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் கூட்டம் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.