அரசியல்

பதவியேற்பு விழாவுக்கு புறப்பட்ட தொண்டர்கள் தடுத்து நிறுத்தம்... பேருந்து மீது கல்வீசி தாக்கியதால் பரபரப்பு

காங்கிரஸ் கட்சியின் புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழாவில் பங்கேற்பதற்காக, கன்னியாகுமரியில் இருந்து கேரள வாகனத்தில் புறப்பட்ட தொண்டர்களை, உள்ளூர் வாகன ஓட்டுநர்கள் தடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

தந்தி டிவி
காங்கிரஸ் கட்சியின் புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழாவில் பங்கேற்பதற்காக, கன்னியாகுமரியில் இருந்து கேரள வாகனத்தில் புறப்பட்ட தொண்டர்களை, உள்ளூர் வாகன ஓட்டுநர்கள் தடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது. வெளி மாநில வாகனத்தை அனுமதிக்க மறுத்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. போலீசார் விரைந்து வந்து பேச்சு வார்த்தை நடத்தினர். இதற்கிடையே, அனுமதி பெறுவதற்காக சென்ற பேருந்தின் மீது பார்வதிபுரம் அருகே மர்ம நபர்கள் கல்வீசி தாக்கியதால் பேருந்தின் கண்ணாடி உடைந்தது. தப்பியோடிவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்