அரசியல்

"காங்.ன் திட்டம்.. ".. பாஜக, கூட்டணி வேட்பாளர்களுக்கு பிரதமர் கடிதம்

தந்தி டிவி

ஓபிசி, பட்டியலினத்தவரின் இடஒதுக்கீட்டைப் பறித்து தங்கள் வாக்கு வங்கிக்கு வழங்க நினைக்கும் காங்கிரஸ் கட்சியின் உள்நோக்கத்தை மக்களிடம் பரப்புமாறு

பாஜக வேட்பாளர்களுக்கு பிரதமர் மோடி கடிதம் எழுதியுள்ளார்.

மக்களவைத் தேர்தலுக்கான மூன்றாம் கட்ட வாக்குப்பதிவு, மே 7-ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதையொட்டி, அந்த தேர்தலில் போட்டியிடும் பாஜக மற்றும் கூட்டணிக் கட்சிகளின் வேட்பாளர்களுக்கு பிரதமர் மோடி தனித்தனியாக கடிதம் அனுப்பி உள்ளார். அந்த கடிதத்தில், பட்டியலினத்தவர், பழங்குடியினர் மற்றும் ஓபிசி பிரிவினரின் இட ஒதுக்கீட்டை பறித்து, காங்கிரஸ் கட்சி தங்கள் வாக்கு வங்கிக்கு வழங்க நினைப்பதாக குறிப்பிட்டுள்ளார். எனவே, காங்கிரஸ் கட்சியின் உள்நோக்கத்தை பாஜக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்கள் மக்களிடம் பரப்பி விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்றும் அந்த கடிதத்தில் பிரதமர் மோடி கேட்டுக் கொண்டுள்ளார். காந்திநகர் தொகுதியில் போட்டியிடும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில், மிகவும் மதிக்கத்தக்க கட்சியின் நிர்வாகி எனவும், அமைப்பு மற்றும் அரசு ரீதியிலான பல்வேறு பணிகளில் முக்கிய பங்கு வகித்திருப்பதாகவும் பிரதமர் மோடி பாராட்டியுள்ளார்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை