அரசியல்

#BREAKING || மன்மோகன் சிங் நினைவிடம்..இது அவமதிக்கும் செயல்..கடிந்து கொண்ட முதல்வர் ஸ்டாலின்

தந்தி டிவி

முன்னாள் பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங் அவர்களின் குடும்பத்தார் அவருக்கு நினைவகம் கட்டுவதற்குரிய இடத்தில் அவரது இறுதிச் சடங்குகளைச் செய்ய அனுமதிக்க வேண்டும் என்று கோரியதை பா.ஜ.க. அரசு நிராகரித்துள்ளது. இது அவரது உயர்ந்த தொண்டையும், அவரது சீக்கிய சமூகத்தையும் நேரடியாகவே அவமதிக்கும் செயலாகும்.

அவரது குடும்பத்தார் வைத்த கோரிக்கையை மறுத்து, இரு முறை பிரதமராக இருந்த தலைவரின் இறுதிச் சடங்கு நிகழ்வைச் சாதாரணமாக நிகம்போத் காட்-இல் வைத்து நடத்தியிருப்பது ஒன்றிய பா.ஜ.க. அரசின் ஆணவத்தையும், பாரபட்சத்தையும் காட்டுகிறது. இது, அவரது பெரும் பங்களிப்புகளை மக்களின் நினைவில் இருந்து அகற்ற முனையும் அப்பட்டமான முயற்சியாகும்.

டாக்டர் மன்மோகன் சிங் அவர்களது தலைமை இந்தியாவின் பொருளாதாரத்தை மாற்றியமைத்துக் கோடிக்கணக்கான மக்களை வறுமையின் பிடியில் இருந்து மீட்டெடுத்தது. இத்தகைய உயர்ந்த தலைவரை அவமதிப்பது என்பது இந்தியாவின் முன்னேற்றத்தையே அவமதிப்பதற்குச் சமமாகும். பெருந்தலைவர்களை அவமதிக்கும் கறை வரலாற்றில் இருந்து என்றும் மறையாது!

BREAKING || விஜய்யின் திடீர் ஆலோசனை... பரபரக்கும் தவெக - ஒன்றுகூடிய முக்கிய தலைகள்

TN Election | IPS Transfer | அறிவிக்கப்பட்ட தேர்தல் - தமிழகத்தில் ஐபிஎஸ் அதிகாரிகள் அதிரடி இடமாற்றம்

Breaking | BPJ | யார்..யார்..? ஆட்டத்தை ஆரம்பித்த பாஜக.. வெளியான அதிரடி லிஸ்ட்..

BREAKING || தவெக போட்ட வழக்கு - தமிழக அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு

#BREAKING || Kerala Election 2026 | அறிவித்தது பாஜக - சூடுபிடிக்கும் கேரள சட்டப்பேரவை தேர்தல்