ஒவ்வொரு வெள்ளி கிழமையும் CM விஜய் பட்டு, வேட்டி சட்டையில் தோன்றுவது ஏன்? - உடை ரகசியத்திற்கு கிடைத்தது விடை
திரைத் துறை முதல் அரசியல் களம் வரை தான் அணியும் ஒவ்வொரு ஆடையிலும் தனித்துவ முத்திரை பதிக்கும் முதல்வர் விஜய், தற்போது வெள்ளிக்கிழமை தோறும் பாரம்பரியப் 'பட்டு வேட்டி - சட்டை'யில் வந்து புதிய டிரெண்டை உருவாக்கியுள்ளார்... திரையில் உச்ச நட்சத்திரமாக ஜொலித்த முதல்வர் விஜய் அணியும் ஒவ்வொரு உடையும் மக்கள் மத்தியில் சட்டென்று ஒரு ட்ரெண்ட்டை உருவாக்கி விடுகிறது... தமிழக வெற்றித் கழகத் தலைவராக அரசியலில் களமிறங்கியபோது, தீவிரப் பிரச்சாரத்தில் அவர் அணிந்து வந்த வெள்ளை சட்டையும் காக்கி பேண்ட்டும்... வாக்குப்பதிவு நாளன்று மக்கள் மத்தியில் புதிய அரசியல் ஸ்டைலாகவே மாறியிருந்தது... ஆடை மட்டுமல்ல.... முதல்வர் விஜய் நெற்றியில் வைத்து வந்த 'அரகஜா திலகம்' சோஷியல் மீடியாவில் பயங்கர வைரலானது... தமிழக அரசியலில் வழக்கமாக வெள்ளை வேட்டி வெள்ளை சட்டை அணிவதுதான் காலம் காலமாக தொடர்ந்த ஆடை அடையாளமாக இருந்தது.. ஆனால் முதல்வராகப் பொறுப்பேற்ற புதிதில் யாரும் எதிர்பார்க்காத வகையில் மிடுக்கான 'கோட் - சூட்' உடையில் வந்து அசத்தினார் முதல்வர் விஜய்... இப்படி அவரது ஒவ்வொரு ஸ்டைலும் மக்கள் மத்தியில் வைரல் டாபிக்காக மாறி வரும் நிலையில்... தற்போது வெள்ளிக்கிழமை தோறும் முதல்வர் அணிந்து வரும் பட்டு வேட்டி பட்டு சட்டையும் மக்களின் கவனத்தை பெரிதும் ஈர்த்துள்ளது. முதன்முறையாக கடந்த மே 29-ஆம் தேதி வெள்ளிக்கிழமை அன்று பட்டு வேட்டி - சட்டையில் முதல்வர் விஜய் தலைமைச் செயலகம் வந்த போது....அவரது மேலாளர் ஜெகதீஷ் பழனிசாமியின் இல்ல விழாவில் பங்கேற்றுவிட்டு வந்ததால், அந்த உடை அணிந்திருக்கலாம் என கருதப்பட்டது... ஆனால், போகப் போகத்தான் தெரிந்தது அது ஃபங்க்ஷன் டிரஸ் இல்லை... முதல்வர் விஜய்யின் 'ஃபிரைடே ஸ்பெஷல் லுக்' என்று... கடந்த மாதம் 17ஆம் தேதி கொட்டும் மழையில், கையில் குடையைப் பிடித்துக்கொண்டு சென்னை மாணவர் விடுதிக்கு பட்டு வேட்டி-சட்டையில் முதல்வர் விஜய் திடீர் விசிட் அடித்த காட்சிகள் இணையத்தில் வைரலாகி தமிழர்களின் இதயங்களை வென்றிருந்தன... அதன் பிறகு அடுத்தடுத்த வெள்ளிக்கிழமைகள் தோறும் முதல்வர் விஜய் தமிழர்களின் பாரம்பரிய உடையான பட்டு வேட்டி பட்டு சட்டை அணிந்திருக்கும் புகைப்படங்கள் வெளியாகி வந்த நிலையில்.... தற்போது சட்டமன்றத்திற்கும் முதல்வர் விஜய் பட்டு வேட்டி சட்டையில் வந்திருப்பது மக்கள் மத்தியில் கவனம் பெற்றுள்ளது