அரசியல்

CM Vijay By Election Campaign | இன்று பிரசாரத்தில் இறங்கும் CM விஜய் - தடல்புடலாக ரெடியான ஸ்பாட்

இன்று பிரசாரத்தில் இறங்கும் CM விஜய் - தடல்புடலாக ரெடியான

thanthitv

#CMVijay #ByElection #ByElection2026 #Campaign #TVK #Maduranthakam #MaduranthakamByElection #TNPolitics #ThanthiTV CM Vijay By Election Campaign | இன்று பிரசாரத்தில் இறங்கும் CM விஜய் - தடல்புடலாக ரெடியான ஸ்பாட் மதுராந்தகம் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலை முன்னிட்டு, தமிழக வெற்றிக் கழகத் தலைவரும், தமிழ்நாடு முதலமைச்சருமான விஜய் இன்று தேர்தல் பரப்புரை மேற்கொள்ள உள்ளார். இதற்காக ஆத்தூர் சுங்கச்சாவடி அருகே சுமார் 40 ஏக்கர் பரப்பளவில் பிரம்மாண்ட பொதுக்கூட்டத்துக்கான ஏற்பாடுகள் இரவு பகலாக தீவிரமாக நடைபெற்று வருகின்றன. மாலை 3 மணியளவில் நடைபெறும் நிகழ்ச்சியில், QR குறியீட்டுடன் கூடிய அனுமதிச்சீட்டு பெற்ற 5 ஆயிரம் பேருக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அனுமதிச்சீட்டு இல்லாதவர்கள், கர்ப்பிணிப் பெண்கள், சிறுவர்-சிறுமியர், பள்ளி மாணவர்கள், மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்டோருக்கு அனுமதி இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே மைதானத்தை சீரமைத்தல், பந்தல், மேடை, குடிநீர் மற்றும் மருத்துவ வசதிகள் உள்ளிட்ட பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. முதலமைச்சர் விஜய் பங்கேற்கும் நிகழ்ச்சியை முன்னிட்டு ஆத்தூர் சுங்கச்சாவடி சுற்றுவட்டாரத்தில் போலீஸ் பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டுள்ளது. சட்டம்-ஒழுங்கு ஏடிஜிபி அன்பு, நிகழ்ச்சி நடைபெறும் இடத்தை நேரில் பார்வையிட்டு பாதுகாப்பு ஏற்பாடுகளை ஆய்வு செய்துள்ளார்.

CM Vijay | Maduranthakam | நாளை CM விஜய் பிரசாரம்.. TVKவினருக்கு வெளியான திடீர் அறிவிப்பு

BREAKING || இனி அரசு பள்ளி சமையலர்கள் அலட்சியமாக இருக்க நடுங்குவார்கள் - ஆப்பு வைத்த தமிழக அரசு

Gem Veeramani | ACP Yasmin | கோயம்பேடு AC காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்

TN Govt | Arun IPS | TN Police | அருண் IPS மீது தமிழக அரசு அதிரடி நடவடிக்கை

Madurai | Court | Politics | "ஆட்சிகள் மாறினாலும், காட்சிகள் மாறவில்லை.." கோர்ட் அதிருப்தி