அரசியல்

CMVIJAY | POLICE தமிழகத்தையே திரும்பி பார்க்க வைத்த கார் சேஸிங் நேரில் அழைத்து பாராட்டிய CM விஜய்

தமிழகத்தையே திரும்பி பார்க்க வைத்த கார் சேஸிங் நேரில் அழைத்து பாராட்டிய CM விஜய்

thanthitv

தமிழகத்தையே திரும்பி பார்க்க வைத்த கார் சேஸிங் நேரில் அழைத்து பாராட்டிய CM விஜய் #cmvijay #carchase #police குட்கா கடத்தலை துணிச்சலுடன் தடுத்த தலைமைக் காவலரை நேரில் அழைத்து பாராட்டிய மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்.. கடந்த 27.09.2026 அன்று கோவில்பாளையம் காவல் நிலைய தலைமைக் காவலர் திரு.வேல்முருகன்(456), குட்கா பொருட்களை கடத்திச் சென்றவர்கள் காரில் தப்பிச் செல்ல முயன்றபோது, தனது உயிரையும் பொருட்படுத்தாமல் தப்பிச் சென்ற காரின் மேற்கூரையில் ஏறி, குற்றவாளிகள் தப்பிச் செல்வதைத் தடுக்கும் நோக்கில் சுமார் 40 கி.மீ. தூரம் மிகுந்த துணிச்சலுடன் பயணித்தார். தொடர்ந்து காவல்துறையினரின் ஒருங்கிணைந்த நடவடிக்கையால், மேற்படி வாகனம் அவிநாசி அருகே தடுத்து நிறுத்தப்பட்டது. இதில் தொடர்புடைய மூன்று நபர்கள் கைது செய்யப்பட்டு, அவர்களிடமிருந்து 233 கிலோ குட்கா பொருட்கள் மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட கார் பறிமுதல் செய்யப்பட்டது. தலைமைக் காவலர் திரு.வேல்முருகனின்(HC 456) சிறப்பான துணிச்சல், சமயோசிதம் மற்றும் கடமை உணர்வைப் பாராட்டி, தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள்* அவரை நேரில் அழைத்து, அவரது வீரதீர செயலுக்கு பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்தார். மேலும்,தமிழ்நாடு காவல்துறை இயக்குநர் அவர்களும் தலைமைக் காவலர் திரு. வேல்முருகனை நேரில் பாராட்டி, அவரது சிறப்பான துணிச்சல் மற்றும் கடமை உணர்விற்கு வாழ்த்துகளைத் தெரிவித்தார்.தனது உயிருக்கு பெரும் ஆபத்து ஏற்படும் சூழ்நிலையிலும் கடமை உணர்வுடன் துணிச்சலாக செயல்பட்ட தலைமைக் காவலர் 456 திரு. வேல்முருகனின் வீரதீர செயல் அனைவரது பாராட்டையும் பெற்றுள்ளது

Metro Train | Poonamallee | Vadapalani | பூந்தமல்லி-வடபழனி மெட்ரோ ரயில் கட்டணம் வெளியீடு

Tasmac | டாஸ்மாக் கடைகளுக்கு கூடுதல் சலுகை.. அக்.1 முதல் அமல்!

Breaking | TN Rains | தமிழகத்தில் நாளை 11 மாவட்டங்களில் கனமழை | வந்தது அலர்ட்

CM VIjay Dharapuram Campaign | நாளை தாராபுரம் வரும் CM விஜய்..இன்றே ஸ்பாட்டில் இறங்கிய அமைச்சர்கள்

Gem Veeramani | ஜெம் வீரமணி வழக்கில் வெளியாகும் திடுக்கிடும் தகவல்கள்.. வெளிவரும் அதிர்ச்சி உண்மைகள்