CM விஜய் ஆய்வுக்கு வந்த போது திரைச்சீலையால் மறைக்கப்பட்ட சில இடங்கள் - என்ன காரணம்? சென்னையில் முதலமைச்சர் விஜய் ஆய்வுக்கு வந்த பகுதியில் சில இடங்கள் திரைச்சீலையால் மறைக்கப்பட்டன... சேத்துப்பட்டில் உள்ள இயற்கை எரிவாயு மையத்தில் முதலமைச்சர் விஜய் ஆய்வு மேற்கொண்டார். ஆய்வுக்காக முதலமைச்சர் விஜய் வந்தபோது சில இடங்களில் திரைச்சீலைகள் போடப்பட்டு இருந்தன. அப்பகுதியில் சாலையோரத்தை சிலர் சிறுநீர் கழிக்கும் இடமாக பயன்படுத்தி வருவதாக கூறப்படும் நிலையில், துர்நாற்றம் வீசும் பகுதியை திரைச்சீலை கொண்டு அதிகாரிகள் மறைத்தனர். இதேபோல், சேதம் அடைந்த அம்மா உணவகத்தின் கட்டட பகுதியையும் திரைச்சீலை கொண்டு அதிகாரிகள் மறைத்தனர். இதனிடையே அப்பகுதியை தூய்மையாக வைத்திருக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.