சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் நடைபெற்ற முத்தமிழ்ப் பேரவையின் இசைவிழா மற்றும் விருது வழங்கும் விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கலைஞர்களுக்கு விருதுகளை வழங்கி பராட்டினார். நடிகர் நாசருக்கு கலைஞர் விருது வழங்கப்பட்டது. ராஜரத்னா விருது, வடுவூர் எஸ்.என்.ஆர்.கிருஷ்ணமூர்த்திக்கு வழங்கப்பட்டது. இதுதவிர, இயல் செல்வம் விருது, இசைச் செல்வம், நாட்டியச் செல்வம், நாதஸ்வரச் செல்வம், தவில் மற்றும் மிருதங்கச் செல்வம் விருதுகள், பல்வேறு கலைஞர்களுக்கு வழங்கப்பட்டன. விருதுபெற்ற பின் பேசிய நடிகர் நாசர், அடுத்த ஆண்டும் முதலமைச்சரே விருதுகளை வழங்க வேண்டும் என்று விருப்பம் தெரிவித்தார். அதற்குப் பதிலளித்த முதலமைச்சர் ஸ்டாலின், முதலமைச்சராக என்று இல்லாமல் முதல் நபராக முத்தமிழ் பேரவை விழாவிற்கு தாம் வந்து விடுவேன் என்று உறுதியளித்தார்.