மரகதம் குமரவேல் குறித்த அவதூறு பேச்சால் வெடித்த மோதல் - விசிக நிர்வாகிக்கு அரிவாள் வெட்டு
#tvk #vck #maragathamkumaravel
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே கருங்குழியில், விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகி தேவமூர்த்தி மீது அரிவாளால் தாக்குதல் நடத்தப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தவெக வேட்பாளர் குறித்து அவதூறாக பேசியதாக கூறப்பட்ட சம்பவத்தை தட்டிக்கேட்டதில் தகராறு ஏற்பட்டதாக தெரிகிறது. அப்போது சரவணன் என்பவர் தேவமூர்த்தியை அரிவாளால் தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் தலையில் பலத்த காயமடைந்த தேவமூர்த்தி, செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தேர்தல் பரபரப்புக்கு மத்தியில் நடந்த இந்த சம்பவம் கருங்குழியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.