அரசியல்

காமராஜர் சிலை பீடத்தில் பாஜக கொடி கட்டியதால் ஆத்திரம் - பாஜக-காங்கிரஸ் கட்சி தொண்டர்கள் மோதல்

சேலத்தில் காமராஜர் சிலைக்கு மாலை அணிவிக்கும் நிகழ்ச்சியின்போது, பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சியினரிடையே ஏற்பட்ட தள்ளுமுள்ளுவால் பரபரப்பு ஏற்பட்டது.

தந்தி டிவி

சேலம் இரண்டாவது அக்ரஹாரம் பகுதியில் உள்ள காமராஜரின் சிலைக்கு அரசியல் கட்சியினர் மற்றும் பல்வேறு அமைப்பினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் சேலம் வந்த பொன் ராதாகிருஷ்ணன் காமராஜர் சிலைக்கு மாலை அணிவிக்க சென்றார். அப்போது அங்கு வந்த காங்கிரஸ் கட்சியினர் காமராஜர் சிலை பீடத்தின் மீது இருந்த பாஜக கொடியை அகற்றுமாறு கூறியுள்ளனர்.

அதற்கு பாஜகவினர் எதிர்ப்பு தெரிவிக்கவே இருதரப்பினர் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அப்போது பாஜக கொடிகள் அங்கிருந்து அகற்றப்பட்டன. இதனையடுத்து அங்கு வந்த போலீசார் இருதரப்பினரையும் சமாதானப்படுத்தினர்.

பின்னர் காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்த பின்

செய்தியாளர்களை சந்தித்த பொன்.ராதாகிருஷ்ணன், பிரச்சினை எழக்கூடாது என்பதற்காக பாஜக விட்டுக்கொடுத்து செல்வதாக தெரிவித்தார். மேலும் யார் எப்படி நடந்துகொண்டார்களோ அவர்களின் அநாகரீக செயலை காட்டுவதாகவும் கூறினார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்