அரசியல்

குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு ஆதரவு திரட்ட பாஜக முடிவு - நாடு முழுவதும் 10 நாள்களுக்கு தொடர்ச்சியாக பிரசாரம்

குடியுரிமை திருத்தச்சட்டத்துக்கு ஆதரவு திரட்டும் நோக்கில் வீடு தோறும் பிரசாரத்தில் ஈடுபட பாஜக முடிவு செய்துள்ளது.

தந்தி டிவி

குடியுரிமை திருத்தச்சட்டத்துக்கு ஆதரவு திரட்டும் நோக்கில் வீடு தோறும் பிரசாரத்தில் ஈடுபட பாஜக முடிவு செய்துள்ளது. அதன்படி டெல்லியில் உள்துறை அமைச்சர் அமித்ஷாவும், காஜியாபாத் பகுதியில் ஜெ.பி.நட்டாவும், லக்னோவில் பாதுகாப்புத்துறை அமைச்சா் ராஜ்நாத்சிங்கும், நாகபுரியில் மத்திய அமைச்சா் நிதின் கட்கரியும், ஜெய்ப்பூரில் மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமனும் வீடு தோறும் சென்று பிரசாரத்தில் ஈடுபட உள்ளனா். நாடு முழுவதும், 10 நாள்களுக்கு இந்த பிரச்சாரம் செய்து 3 கோடி குடும்பங்களின் ஆதரவைத் திரட்ட முடிவெடுக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் கர்நாடக மாநிலம் பெங்களூருவில் மாநில முதலமைச்சர் எடியூரப்பா தேசிய குடியுரிமை திருத்த சட்டம் குறித்து பொதுமக்களின் வீடுகளுக்கே சென்று நேரடியாக விளக்கமளித்தார்.

Breaking | TN Election 2026 | பிப்ரவரி 17.. | தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

Breaking | Teachers | School | இடைநிலை ஆசிரியர்களின் 37 நாள் போராட்டம்.. தற்காலிக வாபஸ்

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்