அரசியல்

ப.சிதம்பரம் கைது செய்யப்பட்டதை கண்டித்து போராட்டம் - போராட்டத்தின் போது உயிரிழந்த காங். நிர்வாகி

காங்கிரஸ் கட்சியின் உண்ணாவிரத போராட்டத்தின் போது அக்கட்சி நிர்வாக மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது

தந்தி டிவி
முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் கைது செய்யப்பட்டதை கண்டித்து கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பத்தில் காங்கிரஸ் சார்பில் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது. கட்சியின் மாவட்ட துணை தலைவர் முருகன் பேசிக்கொண்டிருந்த போது திடீரென மயங்கி விழுந்தார். அங்கிருந்தவர்கள் உடனடியாக அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர். உண்ணாவிரத போராட்டத்தின் போது மயங்கி விழுந்து நிர்வாகி உயிரிழந்த சம்பவம் கடலூர் மாவட்ட காங்கிரஸார் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Nirmalkumar | "பல முறைகேடு நடந்திருக்கு.. சம்பந்தப்பட்ட அனைவரும் கைது செய்யப்படணும்.." - அமைச்சர்

#BREAKING || Vikram 1 | காற்றை கிழித்து விண்ணில் சீறி பாய்த்தது விக்ரம்-1

#BREAKING || vikram1 | கடைசி நேரத்தில் வந்த அறிவிப்பு

Vikram-1 | விக்ரம்-1-ஐ விண்ணில் ஏவும் நேரத்தில் ஏற்பட்ட பிரச்சனை.. இதுதான் காரணம்

ISRO | Vikram-1 | இன்னும் சில நிமிடங்களில்.. இந்தியா எழுதப்போகும் புதிய சரித்திரம்