அரசியல்

கல்லூரி மாணவியை சாதியை சொல்லி திட்டிய பாமக கவுன்சிலர்.. சென்னையில் பரபரப்பு

தந்தி டிவி

சென்னை பல்லாவரம் அடுத்த பொழிச்சலூரில், சரண்ராஜ் என்பவர் வீட்டு உபயோக பொருட்கள் விற்பனை கடை நடத்தி வருகிறார். இவரது கடை முன்பு இருசக்கர வாகனத்தை நிறுத்தியது தொடர்பாக அந்த பகுதியை சேர்ந்த பா.ம.க. கவுன்சிலர் சுரேஷ் என்பவருடன் தகராறு ஏற்பட்டுள்ளது. கடந்த புதன்கிழமை கவுன்சிலர் சுரேஷ், தனது மனைவி மற்றும் ஆதரவாளர்களுடன் சென்று சரண்ராஜ் மற்றும் அவருடைய கடையில் பணிபுரியும் கல்லூரி மாணவியை தாக்கியதுடன் சாதி பெயரை சொல்லி இழிவுபடுத்தியதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக அவர்கள் அளித்த புகாரின்பேரில், கவுன்சிலரின் ஆதரவாளர்கள் மூன்று பேர் கைது செய்யப்பட்டனர். ஆனால், கவுன்சிலர் சுரேஷ் மற்றும் அவருடைய மனைவியை கைது செய்யாமல் போலீசார் ஒருதலைபட்சமாக செயல்படுவதாக அவர்கள் குற்றம் சாட்டி உள்ளனர். தங்களுக்கு நியாயம் கிடைக்கவில்லை என்றால் தனது கல்லூரி மாணவர்களுடன் சேர்ந்து போராட்டத்தில் குதிக்கப் போவதாக பாதிக்கப்பட்ட கல்லூரி மாணவி ஆதங்கத்துடன் தெரிவித்துள்ளார்.

BREAKING || மருதமலை முருகன் சிலை வழக்கு - சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவு

BREAKING || ஈபிஎஸ் தலைமையில்... அதிமுகவின் அடுத்த பாய்ச்சல்

Breaking | TN Police | பெண் பாலியல் வன்கொடுமை.. கேட் கீப்பர் மீது பாய்ந்த நடவடிக்கை

BREAKING || Jananayagan | ஜனநாயகன் வழக்கில் திடீர் திருப்பம் - சென்சார் போர்டு எடுத்த முடிவு

#BREAKING || Today Gold Rate | ஒரே நாளில் 2 முறை.. நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு குறைந்த தங்கம்