அரசியல்

Chennai CM Stalin Speech | முதல்வரின் முத்தான வார்த்தைகள்

முதல்வரின் முத்தான வார்த்தைகள்

thanthitv

Chennai CM Stalin Speech | முதல்வரின் முத்தான வார்த்தைகள் #cmstalin #dmk #sports #youth சென்னை அடுத்த செம்மஞ்சேரியில், சர்வதேச விளையாட்டு நகரம் அமைய உள்ளது. ரூபாய் 261 கோடியில் அமைய உள்ள இந்த சர்வதேச விளையாட்டு நகரத்திற்கு, முதல்வர் ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அடிக்கல் நாட்டிய முதல்வர் ஸ்டாலின், விளையாட்டு வீரர்களுக்கான 3 சதவீத இட ஒதுக்கீட்டின் கீழ் 50 மாற்றுத்திறனாளி விளையாட்டு வீரர்கள் உட்பட 178 பேருக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார். மேலும், 1172 விளையாட்டு வீரர்களுக்கு 33 புள்ளி 5 கோடி உயரிய ஊக்க தொகையும் வழங்கினார். பின்னர் நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர் ஸ்டாலின், படிக்கும் காலத்தில் எந்தவிதமான கவனச் சிதறல்களுக்கும் இடமளிக்காமல், விளையாட்டில் ஆர்வம் காட்ட வேண்டும் என மாணவர்களுக்கு அறிவுரை வழங்கினார்.

Oman Sailor Death | ஓமனில் தமிழக மாலுமி உயிரிழப்பு - உடலை கொண்டுவரும் பணி தீவிரம்

EV Station | எலக்ட்ரிக் வாகன ஓட்டிகளுக்கு ஒரு குட்நியூஸ்.. 4,874 ஸ்டேஷன் வரப்போகுது

Chennai Metro | ரூ.4,500 கோடியில் சென்னை பீச் டூ பரங்கிமலை - இறங்கப்போகும் அதிரடி திட்டம்?

TMC | GK Vasan | கட்சியில் இருந்து விலகிய பொதுச்செயலாளர்.. தமாகாவில் அடுத்த சம்பவம்

Tiruvallur | Death | 3 வயது சிறுமியை சீரழித்த கோர சம்பவம்..