அரசியல்

கடைசி நிமிடத்தில் சிறு சறுக்கல் - தோல்வி அல்ல : நாட்டை தலை நிமிர வைத்துள்ளதாக பிரதமர் பாராட்டு

சந்திரயான் - 2 க்கு ஏற்பட்ட பின்னடைவு குறித்து கருத்து வெளியிட்ட பிரதமர் நரேந்திரமோடி, இது கடைசி நிமிடத்தில் நிகழ்ந்த சிறு சறுக்கலே தவிர, தோல்வி அல்ல என்று விளக்கம் அளித்தார்.

தந்தி டிவி

சந்திரயான் - 2 க்கு ஏற்பட்ட பின்னடைவு குறித்து கருத்து வெளியிட்ட பிரதமர் நரேந்திரமோடி, இது கடைசி நிமிடத்தில் நிகழ்ந்த சிறு சறுக்கலே தவிர, தோல்வி அல்ல என்று விளக்கம் அளித்தார். பெங்களூருவில், இஸ்ரோ விஞ்ஞானிகள் மத்தியில் உரையாற்றிய அவர், சிறந்த உழைப்பின் மூலம் நாட்டை தலைநிமிர வைத்துள்ளதாக பாராட்டினார். ஒரு நாள், நிச்சயம், இந்தியா தமது இலக்கை அடையும் என்று நம்பிக்கை வெளியிட்ட பிரதமர் மோடி, இதற்காக விஞ்ஞானிகள், சோகமாக இருக்க தேவை இல்லை என்றார். சிறு சிறு சறுக்கல்கள் இயல்பு தான் என்றும், நாம் நிச்சயம் முன்னேறுவோம் என்றும் அவர் குறிப்பிட்டார். நிலவு குறித்த ஆய்வு பணியில், நாம் நெருக்கமாக சென்று விட்டோம் என சுட்டிக்காட்டிய பிரதமர் மோடி, இன்னும் கொஞ்சம் உழைப்பு தேவை என கேட்டுக்கொண்டார். சந்திரயான் - 2 பயணம் என்பது மிகவும் அற்புதமானது என்றும் அவர் குறிப்பிட்டார். அறிவியல் - விஞ்ஞானம் என்பதில் எப்போதும் தோல்வி அல்ல என்று அறிவித்த பிரதமர் நரேந்திரமோடி, எப்போதும் விஞ்ஞானிகளுடன் தான் இருப்பதாகவும், தொடர்ந்து முன்னேறுமாறும், பாராட்டு தெரிவித்தார்.

Sekarbabu On CM Vijay | CM குறித்து சேகர்பாபு பேசிய பேச்சு.. போலீஸ் நடவடிக்கை ஆரம்பம்

vinayagarchaturthi | விநாயகர் ஊர்வலத்தின் போது அடித்து கொலை.. சென்னை ராமாபுரத்தில் அதிபயங்கரம்

Omni bus | விடிய விடிய ரெய்டு.. சிக்கிய 20+ ஆம்னி பஸ்கள் நடுவழியில் நிறுத்தி அதிகாரிகள் அதிரடி

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது