அரசியல்

சந்திரபாபு நாயுடு வசிக்கும் வீட்டில் நோட்டீஸ் ஒட்டிய அதிகாரிகள்

ஆந்திர முன்னாள் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு முதலமைச்சராக இருந்தது முதல் தற்போது வரை குண்டூர் மாவட்டத்தில் இருக்கும் உண்டவல்லியில் உள்ள தனியார் கெஸ்ட் ஹவுசில் வசித்து வருகிறார்.

தந்தி டிவி

ஆந்திர முன்னாள் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு முதலமைச்சராக இருந்தது முதல் தற்போது வரை குண்டூர் மாவட்டத்தில் இருக்கும் உண்டவல்லியில் உள்ள தனியார் கெஸ்ட் ஹவுசில் வசித்து வருகிறார். இந்த நிலையில் சந்திரபாபு நாயுடு வசிக்கும் வீடு உட்பட அந்த பகுதியில் கட்டப்பட்டுள்ள 30 க்கும் மேற்பட்ட கெஸ்ட்ஹவுஸ்கள் கிருஷ்ணா நதி கரையை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ளன என்று கூறும் ஆந்திர அரசு அவற்றின் மீது நடவடிக்கை எடுக்க ஒரு மாதத்திற்கு முன் உத்தரவு பிறப்பித்தது. வீட்டை காலி செய்ய ஏற்கனவே கால அவகாசம் அளிக்கப்பட்டு இருந்த நிலையில் யாரும் அங்கிருந்து வெளியேறவில்லை என கூறப்படுகிறது. இந்த நிலையில் இன்று காலை சந்திரபாபு நாயுடு வாசிக்கும் கெஸ்ட்ஹவுசுக்கு சென்ற அதிகாரிகள் ஒரு வாரத்தில் வீட்டை காலி செய்ய கோரி நோட்டீஸ் ஒட்டி சென்றனர்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்