அரசியல்

"ராயலசீமாவுக்கு நீங்கள் செய்தது என்ன?" - ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சிக்கு சந்திரபாபு நாயுடு கடும் கண்டனம்

ராயலசீமாவுக்கு எதிரான மனநிலைதான் அமராவதியை சந்திரபாபு நாயுடு தலைநகராக்கியதற்கு காரணம் என ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி தெரிவித்த கருத்துக்கு சந்திரபாபு நாயுடு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி

ராயல்சீமாவுக்கு நீங்கள் செய்தது என்ன என்றும், அது பற்றி பேச உங்களுக்கு என்ன தகுதி இருக்கிறது என சந்திரபாபு நாயுடு, அம்மாநில முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டிக்கு கேள்வி எழுப்பியுள்ளார். மேலும் ராயலசீமா பகுதிக்கு தண்ணீர் கொண்டு வந்தது என்.டி.ராமாராவ் என்றும், தமது ஆட்சிக் காலத்தில் பல்வேறு தொழிற்சாலைகளை அங்கு தொடங்கியதையும் சந்​திரபாபு நாயுடு சுட்டிக்காட்டி உள்ளார். 3 தலைநகர் அமைக்கும் அரசுக்கு எதிரான போராட்டம், மக்கள் போராட்டம் என்றும், அமராவதியில் இருந்து தலைநகரை மாற்றுவதில் யாருக்கும் விருப்பம் இல்லை என்றும் நாயுடு கூறியுள்ளார். தம்முடைய ஆட்சிக்காலத்தில் தொடங்கப்பட்ட பல்வேறு திட்டங்களை, நீங்கள் நிறுத்தியது ஏன் என கேள்வி எழுப்பியுள்ள சந்திரபாபு நாயுடு, மக்கள் வளர்ச்சியை தான் விரும்புவதாகவும், அரசியல் செய்வதை அல்ல என்றும் தெரிவித்துள்ளார்.

TNSTC| இனி ஈஸியா அரசு பஸ் டிக்கெட் புக் பண்ணலாம்.. சிவப்பு, மஞ்சள் கலரில் அசத்தலாக அப்டேட்டான TNSTC

Breaking | Govt EV Bus | தனியாரை போல மாறும் அரசு பஸ்கள் | களமிறங்கும் புது டெக்னாலஜி

Senthilbalaji | "செந்தில் பாலாஜியை கைது செய்யக்கூடாது"ட்விஸ்ட் கொடுத்த உச்ச நீதிமன்றம்

Breaking | Karnataka CM | ``ரெடியா இருங்க..'' | அவசர மீட்டிங்கில் கர்நாடகா CM

Weather Report | TN Rain | இன்றும், நாளையும்..ரெடியா இருங்க சென்னை மக்களே