முத்தலாக் சட்டத்தை மத்திய அரசு, அவசரம் அவசரமாக நிறைவேற்றி இருப்பதாகவும், அதை நாடாளுமன்ற மாநிலங்களவையில் எதிர்க்கட்சிகள் தோற்கடிக்கும் எனவும் காங்கிரஸ் மூத்த தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் தெரிவித்துள்ளார். ஈரோட்டில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கடந்த நான்கரை ஆண்டுகளில் பிரதமர் மோடியின் வெளிநாட்டு பயணத்துக்காக 2 ஆயிரத்து 500 கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளதாகவும் கூறினார். தமிழகத்தில், தற்போது 2 பேருக்கு எச்ஐவி பாதிப்பு இருப்பது தெரியவந்துள்ள நிலையில், இன்னும் எத்தனை பேருக்கு பாதிப்பு உள்ளது என தெரியவில்லை எனவும் ஈவிகேஎஸ் இளங்கோவன் தெரிவித்தார்.