அரசியல்

இன்று காவிரி மேலாண்மை ஆணையக்கூட்டம்

தந்தி டிவி

காவிரி மேலாண்மை ஆணையத்தின் 22-வது கூட்டம் டெல்லியில் இன்று பிற்பகல் நடைபெறுகிறது.

கர்நாடகா, தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா ஆகிய மாநிலங்கள் இடையேயான காவிரி நதி நீர் பங்கீடு தொடர்பான முடிவெடுக்கும் காவிரி மேலாண்மை ஆணையத்தின் 22-வது கூட்டம் இன்று பிற்பகல் 2:30 மணியளவில் நடைபெறுகிறது. டெல்லியில் உள்ள மத்திய நீர்வளத்துறை அமைச்சகத்தில் ஆணையத்தின் தலைவர் எஸ்.கே.ஹல்தர் தலைமையில் இந்தக் கூட்டம் நடைபெறும். இந்த கூட்டத்தில் பங்கேற்குமாறு கர்நாடகா, தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா ஆகிய 4 மாநிலங்களை சேர்ந்த‌ நீர்வளத்துறை செயலர்கள், பொதுப்பணித்துறை பொறியாளர்கள் ஆகியோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. கூட்டத்தில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் ஜூலை வரை பெய்த மழையின் அளவு, அணைகளின் நீர் மட்டம், நீர் வரத்து, நீர் வெளியேற்றம் மற்றும் பங்கீடு குறித்து விவாதிக்கப்படும் என தெரிகிறது.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்