பெங்களூருவில் செய்தியாளர்களை சந்தித்த அவர், காவிரி மேலாண்மை ஆணையத்தில் பிரச்சினைகள் இருந்தாலும், உச்ச நீதிமன்ற உத்தரவை கர்நாடக அரசு முழுமையாக ஏற்று செயல்படும் என்றார். தற்போதைய சூழ்நிலையில் நல்ல மழை பெய்து வருவதால் ஆணையத்திற்கு வேலையே இல்லை என்றார்.
காவிரி மேலாண்மை ஆணையத்திற்கான கர்நாடக மாநில உறுப்பினர்கள் குறித்து இரண்டு அல்லது மூன்று நாட்களில் மத்திய அரசுக்கு பரிந்துரைக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.