அரசியல்

DMK | ஈஸ்டரில் தேவாலயம் சென்று ஆதரவு திரட்டிய வேட்பாளர்

ஈஸ்டரில் தேவாலயம் சென்று ஆதரவு திரட்டிய வேட்பாளர்

thanthitv

#dmk #karthikdhandapani ஈஸ்டரில் தேவாலயம் சென்று ஆதரவு திரட்டிய வேட்பாளர் செங்கல்பட்டு சட்டமன்ற தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் கார்த்திக் தண்டபாணி, தேவாலயம் முன்பு ஆதரவு திரட்டினார். செங்கல்பட்டு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் திமுக வேட்பாளர் கார்த்திக் தண்டபாணி, தமது ஆதரவாளர்களுடன் சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். இன்றைய தினம் ஈஸ்டர் பண்டிகை என்பதால் ஊரப்பாக்கத்தில் உள்ள தேவாலயத்தில், கார்த்திக் தண்டபாணி அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற வேண்டி, சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. அப்போது திருச்சபைக்கு சென்ற கார்த்திக் தண்டபாணி, திருப்பலி நடத்திய பாதிரியாரிடம் ஆசி பெற்றார். தொடர்ந்து அங்கிருந்த பொதுமக்களிடம் தமக்கு திமுக-வின் உதயசூரியன் சின்னத்தில் வாக்களிக்கும்படி ஆதரவு திரட்டினார். இதையடுத்து தேவாலயத்தின் வாயில் பகுதிக்குச் சென்ற கார்த்திக் தண்டபாணி, திமுக-வின் ஐந்தாண்டு மக்கள் நலத்திட்டங்களை பட்டியலிட்ட துண்டு பிரசுரங்களை பொதுமக்களிடம் வழங்கி வாக்கு சேகரித்தார். அப்போது திமுக நிர்வாகிகள் மற்றும் வேட்பாளர் கார்த்திக் தண்டபாணி ஆதரவாளர்களும் வாக்கு உதய சூரியன் சின்னத்திற்கு வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.

Udhayanidhi Stalin | DMK | பிரசாரத்தின் நடுவே துணை முதல்வர் உதயநிதி கைகாட்டி சொன்ன விஷயம்

Cuddalore | EPS | TN Election | "விஜயகாந்த்.." - மேடையில் பெயரை சொல்லி ஈபிஎஸ் சொன்ன விஷயம்

CM Stalin | Madurai | ``நைட் 12 மணிக்கு கூட..'' | CM ஸ்டாலின் சொன்னதும் அதிர்ந்த மதுரை

Madurai | CM Stalin | DMK |"இந்த ஸ்டாலின் ஒரு தடவை சொன்னா.. அது" - அனல்பறக்க பேசிய முதல்வர் ஸ்டாலின்

Vijay | TVK | அதிரடி திருப்பம்.. விஜய்க்கு க்ரீன் சிக்னல்.. TVKவினருக்கு உற்சாக சேதி..