அரசியல்

ஆம்ஸ்ட்ராங் உடல் வைக்கப்பட்டுள்ள இடத்தில் திடீர் பதற்றம்... பரபரப்பான போலீசார்

தந்தி டிவி

பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத்தலைவர் ஆம்ஸ்ட்ராங் மர்மக் கும்பலால் படுகொலை செய்யப்பட்டார். அவரது உடல், பெரம்பூர் பந்தர் கார்டன் தெருவில் உள்ள பள்ளி வளாகத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் செல்வதற்கு ஒரு வழியும், முக்கிய பிரமுகர்கள், அரசியல் தலைவர்கள் செல்வதற்கு மற்றொரு வழியும் என, இரண்டு வழிகள் பிரிக்கப்பட்டு அஞ்சலி செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பொதுமக்கள் வரிசையாகச் சென்று அஞ்சலி செலுத்தும் வகையில் போலீசார் தடுப்புகளை அமைத்துள்ளனர். உடல் வைக்கப்பட்டுள்ள இடத்தை சுற்றி, ஆயிரத்து 200 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்பகுதியில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இரவு பகலாக பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வரும் காவலர்களுக்கு, காலை முதல் போதிய உணவு வழங்கப்படவில்லை என கூறப்படும் நிலையில், நுழைவாயிலில் பெண் காவலர் திடீரென மயங்கி விழுந்தார்.

CM Vijay Birthday | TVK | "CM விஜய் பிறந்தநாள் அன்று.." - அதிகாரபூர்வ அறிவிப்பு

PM Modi | CM Vijay | PM மோடி உடன்CM விஜய் முக்கிய சந்திப்பு.. கையோடு கொடுத்த லிஸ்ட்

PM Modi |CM Vijay | PM மோடியிடம் நேருக்கு நேராக.. CM விஜய் வைத்த கோரிக்கைகள்

MP | Praveen Chakravarty | மாநிலங்களவை எம்.பி.யாக பிரவீன் சக்கரவர்த்தி - அதிகாரபூர்வ அறிவிப்பு

Bharathiraja Passed Away | மண்ணில் விதையாக புதைந்த இமயம்.. பூவுலகில் பாரதிராஜாவின் கடைசி நிமிடங்கள்