உலகையை ஆட்டிவைக்கும் அசுர பலத்தோடு BRICS - அமெரிக்காவின் சேட்டைக்கு செக்..இந்தியாவில் எழுத போகும் புது சரித்திரம் 18 ஆவது BRICS உச்சி மாநாடு டெல்லியில் செப்டம்பர் 12, 13 தேதிகள்ள நடக்குது. இந்த மாநாட்டுல உலகின் முக்கியமான வளர்ந்து வரும் பொருளாதார நாடுகளோட தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகள் கலந்துகராங்க. இதனால டெல்லி விழாக்கோலம் பூண்டிருக்கிறது. பிரிக்ஸ் அமைப்பில் ஒவ்வொரு ஆண்டும் சுழற்சி முறையில் தலைமை மாறும். அந்த வகையில் இந்தியா தலைமையேற்றிருக்கும் இந்த ஆண்டில் உச்சி மாநாடு டெல்லியில் நடக்கிறது. டெல்லி முழுவதும் BRICS அடையாளங்களுடன் அலங்கரிக்கப்பட்டு உலக தலைவர்களை வரவேற்கும் பேனர்கள் வைக்கப்பட்டிருக்கிறது. மாநாடு நடைபெறும் பாரத் மண்டபம் மட்டுமல்ல டெல்லி முழுவதுமே போலீசார், துணை ராணுவம் குவிக்கப்பட்டு, CCTV கேமராக்கள் கண்காணிப்பு, anti-drone கண்காணிப்பு என பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.
உலகமே திரும்பி பார்க்கும் டெல்லி பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க ரஷ்ய அதிபர் புதின், தென் ஆப்பிரிக்க அதிபர் சிரில் ரமபோசா, ஈரான் அதிபர் மசூத் பெசெஷ்கியான் உள்ளிட்ட தலைவர்கள் எல்லாம் இந்தியாவிற்கு வந்திருக்கிறார்கள்.
#brics #india #china #russia #thanthitv