அரசியல்

Breakfast Scheme| காலை உணவு திட்ட விரிவாக்க நிகழ்ச்சி - மாணவனுக்கு ஊட்டிவிட்ட MLA ஜெகநாத் மிஸ்ரா

காலை உணவு திட்ட விரிவாக்க நிகழ்ச்சி - மாணவனுக்கு ஊட்டிவிட்ட MLA ஜெகநாத் மிஸ்ரா

thanthitv

#tvk #kamarajarbreakfastscheme #jagannathmishra காலை உணவு திட்ட விரிவாக்க நிகழ்ச்சியில் எம்.எல்.ஏ ஜெகநாத் மிஸ்ரா தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே மேலசிந்தலைச்சேரி அரசு மேல்நிலைப் பள்ளியில், 6 முதல் 8-ம் வகுப்பு மாணவர்களுக்கான பெருந்தலைவர் காமராஜர் காலை உணவு திட்ட விரிவாக்க நிகழ்ச்சி நடைபெற்றது. முதலமைச்சர் விஜய் தமிழக அளவில் திட்டத்தை தொடங்கி வைத்த நிலையில், மேலசிந்தலைச்சேரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தேனி மாவட்ட ஆட்சியர் வைத்தியநாதன், கம்பம் சட்டமன்ற உறுப்பினர் ஜெகநாத் மிஸ்ரா உள்ளிட்டோர் பங்கேற்று குத்துவிளக்கு ஏற்றி திட்டத்தை தொடங்கி வைத்தனர். தொடர்ந்து மாணவ-மாணவியருக்கு உணவு பரிமாறிய ஆட்சியர் உள்ளிட்டோர், அவர்களுடன் அமர்ந்து உணவு அருந்தினர். மாணவர்களுக்கு ஜெகநாத் மிஸ்ரா உணவை ஊட்டி விட்டார். இந்த திட்டத்தில் தேனி மாவட்டம் முழுவதும் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் பயன்பெறுகின்றனர். தொடர்ந்து பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகளும் நடப்பட்டன.

Chennai | இரவில் பரபரத்த பெருங்களத்தூர் - டெலிவரி குடோனால் தூக்கம் தொலைத்து எழுந்த மக்கள்

CCB ஆபீஸுக்குள் நுழைந்தார் - அன்பில் மகேஷின் நண்பர் வாளடி கார்த்திக்

CM Vijay | TN Govt | முக்கிய அதிகாரிகளுடன் CM விஜய் ஆலோசனை..

Gem Veeramani Case Arrest | ஜெம் வீரமணி வழக்கில் பரபரப்பு கைது

MRK Panneerselvanm| ``முன்னாள் அமைச்சரை விடுவிக்க முடியாது’’ - அதிர்ச்சி கொடுத்த ஐகோர்ட்