மதுரை அலங்காநல்லூர் அருகே அழகாபுரி பகுதியில் நடைபெற்ற கட்சி நிர்வாகி இல்லத் திருமண விழாவில் சட்டமன்ற உறுப்பினர் தனியரசு கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், தமிழக அரசுக்கு நெருக்கடி கொடுத்து, நாடாளுமன்ற தேர்தலோடு, சட்டமன்ற தேர்தலையும் நடத்த பாஜக முயல்வதாக குற்றம்சாட்டினார். மேலும், கட்சி நிர்வாகிகளிடம் ஆலோசித்து யாருக்கு ஆதரவு என்பதை விரைவில் முடிவு செய்வோம் எனவும் அவர் தெரிவித்தார்.