அரசியல்

வாஜ்பாய்க்கு தமிழக தலைவர்கள் புகழாரம்

மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாய்க்கு, தமிழக பாஜக சார்பில், சென்னையில் புகழஞ்சலி கூட்டம் நடைபெற்றது.

தந்தி டிவி

மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாய்க்கு, தமிழக பாஜக சார்பில், சென்னையில் புகழஞ்சலி கூட்டம் தற்போது நடைபெற்று வருகிறது.

எழும்பூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்று வரும் புகழஞ்சலி கூட்டத்தில், மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர், தமிழக பாஜக தலைவர் டாக்டர் தமிழிசை சவந்திரராஜன், அதிமுக சார்பில் அமைச்சரும், அக்கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான டி. ஜெயக்குமார், திமுக சார்பில் அக்கட்சியின் மகளிர் அணி செயலாளர் கனிமொழி, தமிழக காங்கிரஸ் துணைத்தலைவர் தாமோதரன், த.மா.கா மூத்த தலைவர் ஞானதேசிகன், பாமக சார்பில் ஜி.கே.மணி, புதிய தமிழகம் கட்சியின் நிறுவனர் டாக்டர் கிருஷ்ணசாமி, மதிமுக சார்பில் மல்லை சத்யா, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் வீரபாண்டியன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சார்பில் சம்பத், தொழிலதிபர் விஜிபி சந்தோஷம் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.

புகழஞ்சலி கூட்டத்தில் உரையாற்றிய மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன், தேச வளர்ச்சிக்காக பல்வேறு முன்னேற்றங்களை செய்தவர், வாஜ்பாய் என புகழாரம் சூட்டினார்.

TN Election Result | ECI | வாக்கு எண்ணிக்கை நாள்இன்றே முழுவிவரங்களை வெளியிட்ட தேர்தல் ஆணையம்

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"