டாஸ்மாக் நிறுவனத்தில் 1000 கோடி ரூபாய் அளவுக்கு முறைகேடு நடைபெற்றுள்ளதாக அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது. இதற்கு தமிழகத்தை சேர்ந்த எதிர்க்கட்சிகள் திமுக அரசு மீது கண்டனம் தெரிவித்து வரும் நிலையில், தமிழக பாஜக சார்பில் அக்கட்சியின் மாநிலத்தலைவர் அண்ணாமலை தலைமையில் டாஸ்மாக் நிறுவனத்தின் தலைமை அலுவலகமான எழும்பூரில் உள்ள தாளமுத்து நடராசன் மாளிகையை முற்றுகையிட்டு இன்று போராட்டம் நடத்தப்பட உள்ளது. இந்த போராட்டத்தில் பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் உள்ளிட்டோர் கலந்து கொள்ள உள்ளனர்.