அரசியல்

அதிமுக்கிய 5 மாநில தேர்தல் தேதி அறிவித்த மறுநொடி எதிர்க்கட்சிகளுக்கு ஷாக் கொடுத்த பாஜக

தந்தி டிவி

தெலங்கானா, மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர், ராஜஸ்தான், மிசோரம் ஆகிய 5 மாநிலங்களில், நவம்பர் 7ம் தேதி தொடங்கி நவம்பர் 30-ஆம் தேதி வரை தேர்தல் நடைபெறவுள்ளது. இந்நிலையில், மத்திய பிரதேசத்தில் பாஜக சார்பில் போட்டியிடும் 57 பேர் கொண்ட நான்காவது வேட்பாளர் பட்டியலை பாஜக வெளியிட்டுள்ளது. அதில், மத்திய பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவுஹான், புத்னி தொகுதியில் போட்டியிடுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ராஜஸ்தானில், 41 பேர் கொண்ட முதற்கட்ட வேட்பாளர் பட்டியலையும் பாஜக வெளியிட்டுள்ளது.

தற்போது, நாடாளுமன்ற உறுப்பினர்களாக இருக்கும் ராஜ்யவர்தன் சிங் ரத்தோர், கிரோடி லால் மீனா, நரேந்திர குமார் உள்பட 7 எம்பிக்கள், சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிட பாஜக வாய்ப்பு வழங்கி உள்ளது. சத்தீஸ்கரில் 64 பேர் கொண்ட இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியலையும் பாஜக வெளியிட்டுள்ளது. சத்தீஸ்கர் முன்னாள் முதல்வர் ரமண் சிங், ராஜ்நந்த்கோன் தொகுதியில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

-

BREAKING || சென்னை மின் மயானங்களில் 3 நாட்களுக்கு மட்டுமே சிலிண்டர் கையிருப்பு

BREAKING || "அச்சம் அடைய வேண்டாம்" - தமிழக மக்களுக்கு முக்கிய அறிவிப்பு

BREAKING || "தமிழ்நாடு முழுவதும்..." - அதிமுகவின் பரபரப்பு அறிவிப்பு

Breaking | Vijay | TVK | வந்த அழைப்பு.. குறிக்கப்பட்ட தேதி.. டெல்லி பறக்கும் விஜய்

BREAKING || உண்மை நிலவரம் என்ன? அதிகாரப்பூர்வமாக அறிவித்த மத்திய அரசு