அரசியல்

ஹரியானா சட்டமன்ற தேர்தல்.. பாஜக தேர்தல் வாக்குறுதிகள் வெளியீடு | Haryana Election

தந்தி டிவி

ஹரியானா மாநிலம் ரோஹ்தக் பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மத்திய அமைச்சரும், பாஜக தேசிய தலைவருமான ஜே.பி.நட்டா, தேர்தல் அறிக்கையை வெளியிட்டார். லாடோ லஷ்மி யோஜனா திட்டத்தின் கீழ், அனைத்து மகளிருக்கும் மாதம் இரண்டாயிரத்து 100 ரூபாய் நிதியுதவி வழங்கப்படும் என அதில் அறிவிக்கப்பட்டுள்ளது. 2 லட்சம் இளைஞர்களுக்கு அரசு வேலை வழங்கப்படும் என்றும், அக்னி வீரர்களுக்கு அரசு வேலை வழங்க உத்தரவாதம் அளிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த்யோதயா பி.பி.எல். குடும்பங்களுக்கு 500 ரூபாய்க்கு, சமையல் எரிவாயு சிலிண்டர்கள் வழங்கப்படும். 36 பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு நல வாரியங்கள் அமைக்கப்படும். சிராயு - ஆயுஷ்மான் யோஜனா திட்டத்தின் கீழ், ஒவ்வொரு குடும்பத்திற்கும் 10 லட்ச ரூபாய் வரையும், 70 வயதுக்கு மேற்பட்ட முதியவர்களுக்கு 5 லட்ச ரூபாய் வரையும் இலவச சிகிச்சை வழங்கப்படும் உள்ளிட்ட 20 வாக்குறுதிகளை பாஜக அறிவித்துள்ளது.

CM Vijay | Rahul Gandhi | TVK | Congress | 1 மணி நேரம் மீட்டிங் முடிந்ததும் திடீர் ட்விஸ்ட்

Rahulgandhi |CMVijay |CM விஜய்யுடன் ராகுல் முக்கிய மீட்டிங்- திமுகவில் இருந்து வந்த முதல் ரியாக்‌ஷன்

CM Vijay | RahulGandhi | ஒரே காரில் வெளியே வந்த CM விஜய் & ராகுல் காந்தி | யாரும் எதிர்பாரா ட்விஸ்ட்

CM Vijay | Rahul Gandhi | "எதிர்க்கட்சிகளின் நேரேட்டிவை உடைத்த CM விஜய்"

Rahul Gandhi Meets CM Vijay | "CM விஜய்யும், ராகுல் காந்தி மட்டும் தான்.." - வெளியான தகவல்