அரசியல்

"பாஜகவுக்கு ஆதரவு.. ஆனால்.." - கடைசியில் பெரிய ட்விஸ்ட் வைத்த காங்கிரஸ்

தந்தி டிவி

மக்களவை சபாநாயகர் தேர்தல் நாளை நடைபெற உள்ளது. இதில், ஆளும்கட்சி வேட்பாளர் ஓம் பிர்லாவுக்கு எதிராக, இந்தியா கூட்டணி சார்பில் கொடிக்குனில் சுரேஷ் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார். இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள காங்கிரஸ் பொதுச்செயலாளரும், மக்களவை உறுப்பினருமான கே.சி.வேணுகோபால், தாங்கள் இன்னும் காத்திருப்பதாகவும், துணை சபாநாயகர் பதவியை கொடுக்க ஆளும் தரப்பு தயாராக இருந்தால், தேசிய ஜனநாயக கூட்டணியின் வேட்பாளரை ஒருமனதாக தேர்வு செய்ய தயாராக உள்ளதாகவும் குறிப்பிட்டார். ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியில் இருந்தபோது, ​​துணை சபாநாயகர் பதவியை 10 ஆண்டுகள் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு வழங்கியதாகவும், மக்களவையில் எதிர்க்கட்சிகளுக்கு துணை சபாநாயகர் பதவி வழங்குவதுதான் மரபாக இருந்து வருவதாகவும் கே.சி.வேணுகோபால் கூறினார்.

BREAKING || சென்னை மின் மயானங்களில் 3 நாட்களுக்கு மட்டுமே சிலிண்டர் கையிருப்பு

BREAKING || "அச்சம் அடைய வேண்டாம்" - தமிழக மக்களுக்கு முக்கிய அறிவிப்பு

BREAKING || "தமிழ்நாடு முழுவதும்..." - அதிமுகவின் பரபரப்பு அறிவிப்பு

Breaking | Vijay | TVK | வந்த அழைப்பு.. குறிக்கப்பட்ட தேதி.. டெல்லி பறக்கும் விஜய்

BREAKING || உண்மை நிலவரம் என்ன? அதிகாரப்பூர்வமாக அறிவித்த மத்திய அரசு