அரசியல்

"பாஜக-காங்கிரஸ் மேட்ச் பிக்சிங் ஆடுகின்றன" - தம்பிதுரை

நாடாளுமன்றத்தில் காவிரி பிரச்சினையை பேசவிடாமல் காங்கிரஸ்- பாஜக கட்சிகள் மேட்ச் பிக்சிங் விளையாடுவதாக மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை குற்றம்சாட்டியுள்ளார்.

தந்தி டிவி

நாடாளுமன்றத்தில் காவிரி பிரச்சினையை பேசவிடாமல் காங்கிரஸ்- பாஜக கட்சிகள் மேட்ச் பிக்சிங் விளையாடுவதாக மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை குற்றம்சாட்டியுள்ளார். சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மேகதாது அணைக்கு எதிராக தங்களை பேசவிடாமல், ரஃபேல் மற்றும் அகஸ்டா வெஸ்ட்லேண்ட் ஊழல் என மாறிமாறி பாஜக- காங்கிரஸ் குற்றம்சாட்டி வருவதாக கூறினார். இதனால், ஒருபயனும் இல்லை என்று குறிப்பிட்ட தம்பிதுரை, இரண்டு கட்சிகளும் மேட்ச் பிக்ஸிங் முறையில், காவிரி பிரச்சினையை பேசவிடாமல் மறைமுகமாக கர்நாடகாவுக்கு உதவுவதாக விமர்ச்சித்தார்.

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி