ராணிப்பேட்டையில் திமுக இளைஞரணி சார்பில் இரு சக்கர வாகன விழிப்புணர்வு நடைபெற்றது. சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட திமுக நிர்வாகிகள் கலந்து கொண்டு புல்லட் வாகனத்தில் பேரணியாக சென்றனர். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அமைச்சர் காந்தி, ஹெல்மெட் அணிந்து கொண்டு புல்லட் வாகனத்தில் பின்னால் அமர்ந்து பயணம் செய்தபடி விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.