பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமாரை காணவில்லை என, பாட்னா நகர் முழுவதும் சுவரொட்டிகள் ஓட்டப்பட்ட சம்பவம், பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குடியுரிமை சட்ட மசோதாவை ஆதரித்து, ஐக்கிய ஜனதா தளம் நாடாளுமன்றத்தில் வாக்களித்தது. இந்த நிலையில், குடியுரிமை சட்டத்துக்கு எதிராக தற்போது, நாடு முழுவதும் போராட்டம் நடைபெற்று வரும் நிலையில், பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமாரை காணவில்லை என, பாட்னாவில், பல்வேறு இடங்களில் ஓட்டப்பட்ட போஸ்டர் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.