அரசியல்

"பாஜக-வுக்கு வாக்களிக்காததால் மக்களுக்கு துரோகம்" - பொன். ராதாகிருஷ்ணன் மீது விஜய்வசந்த் குற்றசாட்டு

தந்தி டிவி

"பாஜக-வுக்கு வாக்களிக்காததால் மக்களுக்கு துரோகம்" - பொன். ராதாகிருஷ்ணன் மீது விஜய்வசந்த் குற்றசாட்டு

பா.ஜ.கவுக்கு வாக்கு அளிக்காததால் வேண்டும் என்றே 4 வழிச்சாலை பணிகளை மத்திய அரசு முடக்குவதாக காங்கிரஸ் எம்.பி விஜய் வசந்த் தெரிவித்துள்ளார்.

முன்னாள் மத்திய அமைச்சரும் பாஜகவின் மூத்த தலைவருமான பொன். ராதாகிருஷ்ணன், 4 வழிச்சாலை பணிகள் மெதுவாக நடப்பதாகவும், அவரிடம் கொடுக்கப்பட்டு இருந்தால் 3 மாதங்களில் பணிகள் முடிக்கப்பட்டு இருக்கும் எனவும் கூறியுள்ளார்.

இந்த விமர்சனத்தை மறுத்த எம்.பி. விஜய் வசந்த், இதில் எந்த உண்மையும் இல்லை என தெரிவித்தார்.

மேலும், பொன்.ராதாகிருஷ்ணன் கூறியிருப்பதை பார்த்தால் பா.ஜ.கவுக்கு வாக்கு அளிக்காததால் வேண்டும் என்றே இந்த பணிகளை முடக்குகிற வகையில் மத்திய அரசு செயல்படுவதாக தெரிகிறது என்றும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

இந்நிலையில், முன்னாள் மத்திய அமைச்சரின் பேச்சு, குமரி மாவட்ட மக்களுக்கு பா.ஜ.க செய்யும் துரோகம் எனவும், இது வேதனைக்குறியது எனவும் எம்.பி விஜய்வசந்த் கூறியுள்ளார்.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்